தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் நவமணி (53). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(43)-க்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் ராஜேஸ்வரி தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நவமணி அவரது மனைவியைப் பார்க்க சென்றபோது, ​​இரண்டு பேருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார் நவமணி. இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்கவே, அருகில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நவமணி அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதையும் படிக்க : கள்ளக்காதலிக்காக 2வயது மகனை கொன்று ஆற்றில் வீசிய நபர் – மகாராஷ்டிராவில் கொடூரம்

உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)

இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த சுரண்டை போலீசார் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஈச்சம்பவம் குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கணவரை வலைவீசி தேடி வந்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து போலீசார் தப்பி ஓடிய கணவனை காவல்துறை கைது செய்தது. எதற்காக நடந்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : ச.செந்தில் (தென்காசி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link