எலான் மாஸ்க், சாம் ஆல்ட்மேன், கிரெக் ப்ரோக்மேன், ரீட் ஹாஃப்மேன் உள்ளிட்ட பெரும் டெக் ஜாம்பவான்களால் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த `ஓபன் ஏஐ’ என்ற நிறுவனம். பின்னர், அது பலரிடம் கைமாறி இன்று சாம் ஆல்ட்மேன் என்பவர் வசமிருக்கிறது.
சமீபத்தில் ChatGPT மற்றும் Open AI நிறுவனம் பற்றி எலான் மஸ்க் பேசுகையில், “‘Open AI’ அனைவரும் பயன்படுத்தும் ‘Open source’-ஆக லாப நோக்கமற்று இருக்க வேண்டும். ChatGPT-யின் சேவையை இலவசமாக வழங்குவதே எங்களின் நோக்கம். ஆனால் அதில் அதிக லாபம் ஈட்ட மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. முற்றிலும் தவறான போக்கு” என்று எச்சரித்திருந்தார்.
மற்றொருபுறம் ChatGPT-யின் வருகைக்குப் பிறகு பல டெக் நிறுவனங்கள் ChatGPTக்கு போட்டியாக AI செயலிகளை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் அதிதீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் எலான் மஸ்க்கும் இந்த AI ரேஸில் ‘TruthGPT’ எனும் AI செயலியைக் ChatGPTக்குப் போட்டியாகக் களமிறக்கியுள்ளார். இதுபற்றியுள்ள எலான், “நான் ‘TruthGPT’ AI செயலியை உருவாக்குகிறேன். இது முடிந்த அளவிற்கு சரியான உண்மையைத் தேடி கண்டுபிடித்து சிறந்த பதில்களைத் தரும் AI செயலியாக இருக்கும். அதுமட்டுமின்றி இது பிரபஞ்சத்தையும், மனிதர்களையும் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கும். இருக்காது, நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.