புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களை கணித்து கூறியுள்ளார்.

மேஷம்

அஸ்வினி, பரணி, கிருத்திகை உள்ளடக்கிய மேஷ ராசி அன்பர்களே, ஜென்ம குருவை சந்திக்கின்றீர்கள். வெளிநாட்டு பயணங்கள் இடம் மாறுதல் சுப விரயங்கள் ஏற்படும். திருமணம் தடை நீங்கி நடக்கும். மகப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஏற்கனவே சனி 11 இல் நீர் கதிரில் இருப்பதாலும் ராகு ஜென்மத்தில் இருப்பதாலும் ஜென்ம குருவின் தீமை கட்டுப்படுத்தப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

ரிஷபம்

கிருத்திகை 2 ரோகினி, மிருகசீரிஷம் 2 பாதங்களை உள்ளடக்கிய ரிஷப ராசி அன்பர்களே, ராசிக்கு 12ல் குரு ராகு, வீண் விரயம் வீண் அலைச்சல் பட்டாலும் பயன் இல்லை. பிள்ளைகளுக்கான செலவுகள் அதிகமாகும். சிலர் பிள்ளைகளை விட்டு பிரிய நேரிடும். கடுமையான சொற்களை பயன்படுத்தாதீர்கள்.

மிதுனம்

மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்களை உள்ளடக்கிய மிதுன ராசி அன்பர்களே,முதலில் உங்கள் குழந்தைகள் மேன்மை அடைவார்கள். கல்வி வளர்ச்சி ஏற்படும். வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வருடத்தின் பிற்பகுதியில் உடல் நலத்திற்கும், தொழிலிலும் சற்று மந்த நிலை ஏற்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.Source link