அக்ஷய திருதியை முன்னிட்டு சங்கரன் கோவில் நகைக்கடை வீதிகள் முழுக்க பூ அலங்காரங்கள் செய்யப்பட்ட விழா கோலமாக இருந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரும் அக்ஷய திருதியை முன்னிட்டு நகை வாங்குவதில் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று நகைக்கடை உரிமையாளர்கள் இருக்கின்றனர்.
சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திதி அல்லது சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த 3ம் நாள் (திரிதியை) வரும் திதி ‘அட்சய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, செழிப்பு என்று அர்த்தம். அந்தவகையில், அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்த பொருள் பெருகும் என்பது ஐதீகம்.
அதனால்தான் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை எவ்வளவு விலையாக இருந்தாலும் கிராம் கணக்கிலாவது வாங்குவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்பது கிடையாது வீடு, மனை, உப்பு, அரிசி, ஆடை போன்று வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கலாம்.
உங்கள் நகரத்திலிருந்து(தென்காசி)
அன்றைய தினத்தில் எந்த செயலைத் தொடங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும். ஒருவேளை தங்கம் வாங்காத, தங்கம் வாங்க முடியாதவர்கள் ஏழைகளுக்கு தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதால் நம் சந்ததியினர் நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த ஆண்டிற்கான அக்ஷய திருதி ஏப்ரல் 22 ஆம் தேதி காலை 07.49 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 07.47 மணிக்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில், இன்றைய தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ரூ.5605 ஆகவும், சவரனுக்கு 44,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 81 ரூபாயாக இருந்து வருகிறது. அட்சய திருயையில் தங்கம் நிலை குறைந்திருப்பது, தென்காசி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.