மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் பஞ்சாப் வீரர்கள் தடுமாறினாலும் இறுதியில் சாம் கரன், ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர்.

இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து கேமரூன் க்ரின் களமிறங்கினார். ரோஹித் சர்மா, கேமரூன் இணை சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தது. ரோஹித் 27 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய கேமரூன் 67 ரன்களைக் குவித்தார். முந்தைய போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி 57 ரன்களைக் குவித்தார்.

தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியைத் தழுவியது மும்பை அணி. 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாப் அணி வெற்றி பெற முக்கிய காரணம் அர்ஷ்தீப் சிங்தான்.

இறுதி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் மும்பை அணியை கலங்கடித்து வெற்றிக் கனவை குழி தோண்டி புதைத்துவிட்டார். இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங்.. குறிப்பாக, அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது பந்தை எதிர்கொண்ட திலக் வர்மா போல்டாகி வெளியேறினார். அர்ஷ்தீப் சிங் வீசிய அந்தப் பந்தில் மிடில் ஸ்டம்ப் இரண்டு துண்டாகியது.

அடுத்ததாக களமிறங்கிய நேகல் வதீரா, முதல் பந்திலேயே திலக் வர்மா போலவே ஆட்டமிழந்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய இந்தப் பந்தும் மிடில் ஸ்டம்பை இரண்டாக உடைத்தது.

IPL 2023 : பஞ்சாப் கிங்ஸிடம் 13 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மும்பை அணி

இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் அர்ஷ்தீப்பால் பி.சி.சி.ஐக்கு 20 லட்சம் நஷ்டமாகியுள்ளது. ஆம்.. எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய ஒரு ஜோடி ஸ்டம்ப்பின் விலை சுமார் 20 லட்ச ரூபாய் என்று ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.





Source link