வீக் எண்ட் என்றாலே விருந்து… விருந்து என்றாலே அசைவம் என்றாகிவிட்ட நிலையில், இந்த வார வீக் எண்டை காரசாரமாக, வித்தியாசமான அசைவ உணவுகளோடு அமர்க்களப்படுத்த தயாரா?

தேவையானவை:

நண்டு – ஒரு கிலோ

எண்ணெய் – 100 மில்லி

முழு தனியா – 150 கிராம்

பூண்டு – 50 கிராம்

பட்டை – 5 கிராம்

ஏலக்காய் – 5 கிராம்

கறிவேப்பிலை – 5 கிராம்

பச்சை மிளகாய் – 10

வெங்காயம் 150 கிராம்

இஞ்சி – 100 கிராம்

தக்காளி – 100 கிராம்

பழவேற்காடு மசாலா (செய்முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது) – 100 கிராம்

கொத்தமல்லித் தண்டு – 100 கிராம்

மிளகுத்தூள் – 30 கிராம்

கொத்தமல்லித்தழை – 30 கிராம்

உப்பு – தேவையான அளவு

நண்டு சூப்

நண்டு சூப்

இஞ்சி, பூண்டு இவற்றை பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி முழு தனியா போட்டு நன்கு வதக்கவும். பின்னர் பட்டை, ஏலக்காய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி – பூண்டு பேஸ்ட்டை இத்துடன் சேர்த்துக் கொள்ளவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன்பின் பழவேற்காடு மசாலாவையும் சேர்த்துக்கொள்ளவும். கழுவி இருக்கும் நண்டுகளை இதில் சேர்க்கவும். கொத்தமல்லித் தண்டு சேர்த்துக்கொள்ளவும். தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவைக்கவும். கொதித்த பின் இதை வடிகட்டி சூப் மட்டும் தனியான பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூளை இதன் மேல் சேர்த்துக்கொண்டால் நண்டு சூப் ரெடி.Source link