அவரை போலீசார் தேடி வந்த நிலையில், வசாயில் பதுங்கியிருப்பது தெரிந்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது மேரியை தலையணையால் அமுக்கிக் கொலைசெய்தது தெரியவந்தது. போலியோவால் பாதிக்கப்பட்ட சப்னம் 1996-97 வரை மேரியின் வீட்டில் வேலை செய்தார். அதன் பிறகும் அடிக்கடி மேரியின் வீட்டுக்கு வந்து வேலை செய்து கொண்டுதான் இருந்தார். 2019-ம் ஆண்டு மேரிக்கு முழுநேரமும் வேலை செய்ய ஒரு ஆள் தேவைப்பட்டது. உடனே சப்னத்திடம் பேசி அவரை முழு நேரமும் வேலைக்கு சேர்த்துக்கொண்டனர். அவர் காலை 11 மணிக்கு வந்துவிட்டு மாலை வீட்டுக்குச் செல்வார். கடந்த மூன்று மாதங்களாக சப்னத்தை அவருடைய மகன் வண்டியில் கொண்டு வந்து விட்டுவிட்டு, மாலையில் அழைத்துச் செல்ல செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ரவி இது குறித்து பேசுகையில், “சப்னமும், அவருடன் தவறான உறவில் இருக்கும் நபரும் சேர்ந்து மேரியைக் கொலைசெய்ய நீண்ட நாட்களாக திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். வீட்டில் அதிக சொத்து இருக்கும் என்ற நம்பிக்கையில் மேரியைக் கொலைசெய்ய திட்டமிட்டனர். ஆனால் வீட்டில் அவர்கள் எதிர்பார்த்தது போல் பெரிய அளவில் எதுவும் கிடைக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு சப்னம் தெருக்களில் வசித்து வந்தார். அவரைக் கண்டுபிடித்து மேரி வேலைக்குச் சேர்த்து, வாழ்க்கை கொடுத்தார்” என்று தெரிவித்தார்.