Doctor Vikatan: எங்களுடைய நான்கு மாத ஆண் குழந்தை அதிக நேரம் உறங்குவதே இல்லை. எப்போதும் சிணுங்கிக் கொண்டே இருக்கிறான். தாய்ப்பால் போதவில்லை என்று என் அம்மா சொல்கிறார். குழந்தைக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம்தானே… அப்போதுதானே அதன் வளர்ச்சி சீராக இருக்கும்? இதற்கு என்ன தீர்வு?
-Maharasi, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

உண்மையிலேயே உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லையா என்பதைக் கண்டுபிடியுங்கள். குழந்தைக்குத் தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறதா, இல்லையா என்பதை சில அறிகுறிகளை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.
குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கும்பட்சத்தில்… அதாவது தாய்ப்பால் குடிக்கத் தொடங்கியதும் குழந்தை வேகமாக உறிஞ்சத் தொடங்கும். பிறகு ஒருவித சத்தத்துடன் உறிய ஆரம்பிக்கும். இடையிடையே உறிஞ்சுவதை நிறுத்தும்.