திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிபயிலும் 11 முதல் 12 ஆம் வகுப்புமாணவர்களுக்குத் தோ்தல் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனை முகாம்கள் 26.04.2023 அன்று திண்டுக்கல் மற்றும் 02.05.2023 அன்று நிலக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது .
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தினை உயர்த்தும் நோக்கத்தோடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில்தாங்கிபயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி முகாம் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் நடைபெறுவது மற்றும் அதற்கான கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்கள் (Career Guidance) வழங்கப்படுகின்றன.
Mass Movement for Transformation (MMT) and NURTURE என்ற தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் “வேர்களை விழுதுகளாக்குதல்” என்ற பெயரில் 26.04.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 02.05.2023 அன்று நிலக்கோட்டை அரசு மகளிர்கலை கல்லூரியில் காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற உள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)
இந்த முகாம்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும்மாணவர்களுக்குதொழில் மற்றும் அதிக வேலை வாய்ப்புள்ள படிப்புகள் மற்றும் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ச.விசாகன், தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: