திருவண்ணாமலை மண்டலத்தில் செயல்படும் 230 கூட்டுறவு நிறுவனங்களில் வருகிற மே மாதம் 15-ந்தேதி வரை புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, தொடர்புடைய நிறுவனத்தால் கோரும் ஆவணங்களுடன் அனைத்து அலுவலக நேரங்களிலும் சென்று உறுப்பினராக சேரலாம்.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன்கள் குறித்த முழு விவரம் பின்வருமாறு:-

உங்கள் நகரத்திலிருந்து(திருவண்ணாமலை)

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

1. வட்டி இல்லா பயிர்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன்

2. மாற்றுத்திறனாளிகள் கடன்கள்

3.குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன்

4. தானிய ஈட்டு கடன்

5. மகளிர் சுய உதவி குழு கடன் மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீத வட்டியிலான கடன்கள்

6. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட டோர் மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீத வட்டியிலான கடன்கள்

7. தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் வழங்கும் 5 சதவீத வட்டியிலான கடன்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

8. மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் 4 சதவீத வட்டி கடன்கள்

9. அரசு அறிவிக்கும் உதவிகள் அனைத்தையும் பெற்று பயன் பெறலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link