விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆக்சிஜன் சிலிண்டர்கள் துணையுடன் உயிருக்கு போராடி வருகிறார் 4 மகளின் தாய். அவரின் உயிரை காப்பாற்ற தமிழக அரசு உதவி கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே அரும்பட்டு கிராமத்தில் உள்ள சமத்துவபுர குடியிருப்பில் வசித்து வருபவர் மயில் முருகன்(38). டீக்கடையில் தினக் கூலியாக வேலை செய்து மயில் முருகனுக்கு சிவகலா(36) என்ற மனைவியும், சுகாசினி, அனுகாசினி, தேவிப்ரியா, ரியாசினி என 4 மகள்களும் உள்ளனர்.

தினக் கூலி என்றாலும் கூட கிடைக்கும் வருமானத்தை வைத்து கொண்டு மனைவி, மகள்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்த மயில் முருகன். இந்நிலையில், அவரின் மனைவி சிவகலாவிற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிவகலாவின் உடல் நிலை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திடீரென மோசமடைந்தது.

உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)

விழுப்புரம்

விழுப்புரம்

தனது மகள்களுடன் சிவகலா

மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது சிவகலாவிற்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த பாதிப்புகள் காரணமாக மூச்சு விடுவதற்கே சிரமம் ஏற்பட்டு சிவகலாவின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் சென்னை, விழுப்புரம், புதுச்சேரி என பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிவகலா அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளித்தும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால் மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டிலேயே ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறும் ஆக்சிஜனை சுவாசித்தபடி தனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சிவகலா தற்போது உயிர் வாழ்ந்து வருகிறார்.

தனது மக்களுடன் சிவகலா

சிவகலாவிற்கு நாள் ஒன்றுக்கு தேவையான இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க ரூ.1500 தேவைப்படுவதால் தினக் கூலி தொழிலாளியான மயில் முருகன் பண வசதியின்றி கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார். இரக்க மனம் படைத்த சிலரின் உதவியுடன் நாள்தோறும் இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்து தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றி வருவதோடு மட்டுமல்லாமல் தனது 4 மகளையும் படிக்க வைத்து கரைச் சேர்க்க வேண்டிய பொறுப்பு இருப்பதால், பண வசதியின்றி அடுத்து என்ன செய்வது என தெரியாமல் மயில் முருகனின் குடும்பம் தினந்தோறும் கண்ணீரில் தத்தளித்து வருகிறது.

இதையும் படிங்க | கொளுத்தும் வெயிலுக்கு ரெஸ்ட்.. ஜில்லுனு மாறிய விழுப்புரம் கிளைமேட்!

ஆக்சிஜன் சிலிண்டர்களின் துணையுடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, சிவகலாவின் உயிரைக் காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் மயில் முருகனும், அவரது 4 மகள்களும் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாங்கள் படிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் சாப்பிட உணவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. எங்கள் அம்மாவின் உயிரை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கள் என தமிழக அரசிற்கு சிவகலாவின் மகள்கள் கண்ணீருடன் வேண்டுகோள் விடுக்கின்றனர். கணவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் உதவும் நோக்கம் உள்ள தன்னார்வலர்களும், நல் உள்ளம் கொண்ட பொதுமக்கள் உதவ முன்வாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link