இதனைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர்… விழுப்புரம், மகாராஜபுரம் பகுதியில் நவீன மின் தகன மேடையின் பணியினையும், கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினையும், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே கட்டப்பட்டு வருகிறது. வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, “நாளைய தினம் விழுப்புரத்துக்கு வரும் முதலமைச்சர், காவல்துறை மற்றும் விவசாயிகளுடன் பேசிவிட்டு அன்றைய நிகழ்ச்சியை முடிக்கிறார். நாளை மறுநாள்… அமைச்சர்களாகிய பொன்முடி, மஸ்தான், நான், பன்னீர்செல்வம், எ.வ.வேலு, உதயநிதி, பெரியசாமி உள்ளிட்டோர் துறைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆய்வு செய்கிறார்கள்.

மந்திரிகளின் துறை சார்பாக நடைபெறும் பணிகள்… கடந்த வருடத்திலிருந்து இப்போது வரை எப்படி பணிகள் நடக்கின்றன, எப்போது முடிவடையும், எவ்வளவு விரைவாக மக்களின் பயன்பாட்டுக்கு வர முடியும் என்பதை பார்வையிட்டு வரும்படி முதலமைச்சர் சொன்னார்கள். அதன்படி நான் கடலூர், விழுப்புரம் பார்த்துவிட்டேன். என்னுடைய செயலாளர் திண்டிவனம் சென்றிருக்கிறார். துறை அதிகாரிகள் நேற்று கள்ளக்குறிச்சியில் சென்று பார்த்துவிட்டனர், வேலூரையும் பார்த்துவிட்டோம். எனவே முதல்வர் அது குறித்து கேட்கும்போது, ​​பார்வையிட்டு ஆய்வு செய்ததைத் தெரிவிப்போம். பாதாளச் சாக்கடைத் திட்டத்தை இன்று இரண்டு, மூன்று மாதங்களில் முடித்துக் கொடுத்துவிடுவோம். விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.Source link