காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (தொகுதி ஒருங்கிணைப்பாளர்) பணியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) என்பது கிராமப்புற வறுமையை போக்கவும் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும்.காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் அலுவலகம், இயக்க மேலாண்மை அலகில் காலிப்பணியிடமாக உள்ள 5 ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு கீழ்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கல்வித்தகுதி விவரம்:
உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)
1.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படிக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.
2.வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
3.முன் அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான பணிகளுக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4.இருப்பிடம்: சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாக கொண்டு இருக்க வேண்டும்.
5.பாலினம்: பெண்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்-29.04.2023
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி-
இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, (மகளிர் திட்டம்) அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடத்திற்கு தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 29.04.2023-க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: