கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் அணையானது வம்பாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது அழகான அணையாகும். இது குமரி மாவட்டத்தில் உள்ள அருமையான சுற்றுலா தலங்களில் ஒன்று.
எங்கு அமைந்துள்ளது?
முக்கூடல் அணை துவரங்காடு கிராமத்திற்கு அருகில் உள்ளது. இது நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இயற்கை அழகு, பசுமை நிறைந்த மலைகளுக்கு அருகே, உங்கள் உடலை வருடிச்செல்லும் காற்றின் குளிச்சியை இங்கே நன்கு அனுபவித்து மகிழலாம்.
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
இந்த அணைக்கு செல்லும் வழியில் உயரமான மரங்களை பசுமை பரப்பி காணப்படுகின்றன. காற்றில் அவை ஆடும்போது உங்களை தலையசைத்து வரவேற்பதைப்பேல தோன்றும். இந்த அணைக்கு செல்வதற்கு பெரியவர்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறியவர்களுககு 5 ரூபாயும், கேமராவுக்கு 200ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
சினிமா ஷூட்டிங் ஸ்பாட்
இங்கே நீங்கள் போட்டோ ஷூட்டையும் நடத்தலாம், போட்டோ ஷூட் நடத்துவதற்கு 2,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த இடம் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டாகவும் இருந்து வருகிறது. அதன்படி இங்கே திரைப்பட படப்பிடிப்புகளுக்கு 25,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இங்கு பிறந்தநாள் விழாக்களை கொண்டாடுவதற்கு பலரும் விரும்புகின்றனர்.

முக்கூடல் அணை
போன்ற மகிழ்ச்சி நிறைந்த தருணங்களை இந்த முக்கூடல் அணையின் இயற்கை சூழ்ந்த அழகிய இடத்தில் நீங்கள் கொண்டாடி மிகிழலாம். அவ்வாறு நீங்கள் கொண்டாட வேண்டும் என்றால், அதற்கான இடவசதி இங்கே இருக்கிறது. அதற்காக இங்கே 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதையும் படிங்க : பல நோய்களை குணமாக்கும் மருந்து..? இந்த மரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?
அறிவியல் பூங்கா
இந்த அணைக்கு அருகில் அறிவியல் பூங்கா ஒன்று உள்ளது. உங்கள் குழந்தைகள் விளையாட்டுடன் சேர்த்து அறிவியலை கற்றுக் கொள்வதற்கு இந்த பூங்கா உதவியாக இருக்கும். டிக்கெட்டை வாங்கிக் கெண்டு, படியேறி அணையின் கரைக்குச் சென்றாள். அங்கே நீங்கள் காணும் வியூ உங்களை பரவசப்படுத்தும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
காற்றில் லேசாக எழும் நீரலைகள், தூரத்தில் தெரியும் மலை, குளிர் காற்று, தெளிந்து பரந்து கிடக்கும் அணை நீர், திரும்பும் திரையெல்லாம் பசுமை நிறைந்த காட்சிகள் என அனைத்தும் உங்களை மகிழ்விக்கும். மேலே நடப்பதற்கு சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்டு, சிரமம் இன்றி நடப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முக்கூடல் அணை
நாகர்கோவில் நகரின் நீர் ஆதாரம்
இந்த அணை களிமண் மற்றும் கற்களைக் கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. மழை காலங்களில் இந்த அணை நிறைந்த கடல்போல் காட்சியளிக்கும். இந்த அணை நாகர்கோவில் மக்களின் குடிநீருக்கான முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது. மழை இல்லாத நேரங்களில் அணையின் நீர் மட்டம் குறையும், அப்போது பரலியாறு ஆற்றில் இருந்து மோட்டார் மூலமாக இந்த அணைக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
காரணம், நாகர்கோவில் பகுதிக்கு இங்கிருந்து செல்லும் தண்ணீர் தடைபடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கடல் அணையின் இடதுபுறம், அணை நிரம்பும் நேரங்களில் உபரிநீரை வெளியேற்றுவதற்கு தேவையான ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையின் அனைத்து இடங்களுமே உங்கள் நினைவில் தங்கி பசுமையான நினைவுகளாக வரும்.
மறக்காம குடிநீர் எடுத்துட்டு போங்க
இந்த அணைக்கு வரும்போது தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை கையோடு கொண்டு வாருங்கள். இங்கே எந்த கடையும் இருக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதேபேல குப்பைகளை ஆங்காங்கே போடாமல் தூய்மையை கடைபிடிக்கலாம். இந்த அணைக்கு குடும்பத்தோடும், நண்பர்களுடன் வந்து என்ஜாய் பண்ணுங்க. கன்னியாகுமரிக்கு மற்ற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வருபவர்கள் இங்கே விசிட் அடிக்க மறக்காதீங்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: