திருநெல்வேலியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் தொடர்பாக மக்களுக்குகலெக்டர்முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். நெல்லையில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது, அதிகபட்சமாக 100.4டிகிரிவரை வெயில் பதிவாகி இருந்தது. அதாவது அக்னி நட்சத்திர நாட்களில் அடிக்கின்ற வெயிலை போல் நெல்லையில் இப்போதே வெயில் அடிக்கிறது.

இந்த வெயிலுக்கு இடையில் அவ்வப்போது மழை பெய்த போதும், மீண்டும் வெயிலின்தாக்கம்அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசுகிறது. இந்நிலையில் கோடைக்காலங்களில் வறட்சியை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ஏற்படும் குடிநீர்பற்றாக்குறையைச்சரிசெய்யதமிழ்நாடு அரசின் அறிவுரைப்படி மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களின் மூலம் புதியஆழ்துளை அமைத்தல், புதிய கிணறு அமைத்தல், ஏற்கனவே உள்ளஆழ்துளைக் கிணறு அமைத்தல், உள்ளிட்ட 108 குடிநீர் ஆதாரமேம்பாட்டுபணிகளுக்கு கூடுதல் மதிப்பிலான ரூபாய் 5.29 எனவே, பொதுமக்கள் அனைவரும் கோடை காலங்களில் வறட்சியை கருத்தில் கொண்டு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

இதையும் படிங்க | “அனைத்து வேலைக்கு தட்டச்சு பயிற்சி முக்கியம்” நெல்லை வணிகவியல் பொருளாளர்!

குடிநீர் குழாய்களில் சட்டவிரோதமாகமோட்டார்பொருத்தி குடிநீர் உறிஞ்சும் செயலி மேற்கொள்வோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடிநீர் புகார்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

அதன்படி, ஊராட்சி அலுவலகங்களின்தொலைபேசிஎண் விவரம் பின்வருமாறு;

அம்பாசமுத்திரம் – 04634-250397,

சேரன்மகாதேவி 04634-260131,

களக்காடு – 04635-265532

மானூர் – 0462-2485123

நாங்குநேரி – 04635-250229

பாளையங்கோட்டை – 0462-2572092

பாப்பாக்குடி – 04634-274540

ராதாபுரம் – 04637-254125

வள்ளியூர் – 04637-220242.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link