திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மணல் கடத்தல் கும்பலிடம் வட்டாட்சியர் மாமூல் கேட்கும் ஆடியோ வெளியான நிலையில், வட்டாட்சியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வாணியம்பாடி பகுதியில் உள்ள பாலாற்றுப் படுகையில் இரவு பகலாக மணல் கொள்ளை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 22ஆம் தேதி, உதயேந்திரம் பேரூராட்சி 10வது வார்டு திமுக உறுப்பினர் ரஞ்சனியின் கணவர் ராஜூவிடம், வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் மாமூல் கேட்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்க: வேலூர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து தப்பி ஓடியவர்கள் மீட்பு

உங்கள் நகரத்திலிருந்து(வேலூர்)

இந்த நிலையில் வட்டாட்சியர் சம்பத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாந்தி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link