விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் எட்வர்ட், பழைய பொருட்கள் ஆர்வம் காட்டி வருகின்றார். ஏற்கனவே பழைய கடிகாரங்கள் நிறைய சேகரித்து வைத்துள்ள இவர் 80, 90 வார இதழ்கள் மற்றும் மாத இதழ்களில் வந்த பழைய விளம்பரங்களை சேகரித்து பத்திர படுத்தி வைத்துள்ளார்.

அத்துனையும் 80,90 களில் வந்த கருப்பு வெள்ளை விளம்பரங்கள், பக்கம் பக்கமாக வசனங்கள் கொண்ட அந்த விளம்பரங்களை பார்த்த போது, ​​அன்றைய தொலைக்காட்சி பெரிதாக இல்லாத காலம் என்பதால் பெரிய பெரிய வசனங்களின் விளம்பரங்கள் அச்சிட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)

விருதுநகர்

விருதுநகர்

இதில் சிறப்பு என்னவென்றால், இவற்றுள்நிறைய விளம்பரங்கள் இன்று பிரபலமாக இருக்க கூடிய, நிறுவனங்களின் தயாரிப்புகள். அவையெல்லாம் அன்று முதல் இன்று வரை புகழ் பெற்று விளங்கி வருகிறனஎன்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

இது குறித்து பேசிய எட்வர்ட், இந்த மாதிரி பழைய விளம்பரங்களை சேகரித்து வைப்பதன் மூலம் பொருட்களின் அன்றைய விலை மற்றும் இந்த நிறுவனங்களின் வளர்ச்சியை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்கிறார். மேலும் இனி வரும் காலங்களில் விளம்பரங்கள் தயாரிக்க விரும்புவோருக்கு இந்த சேகரிப்பு பயன்படும் என்றார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link