பூரி ஜெகன்நாத்துக்கு உதவிக்கரம் நீட்டிய ராம் பொத்தினேனி

25 ஏப், 2023 – 12:37 IST

எழுத்தின் அளவு:


பூரி-ஜெகநாத்-அடுத்த படம்-ராம்-பொதினேனியுடன்

தெலுங்கு திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். குறிப்பாக மகேஷ்பாபுவை வைத்து இவர் இயக்கிய போக்கிரி திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படிப்பட்ட பூரி ஜெகன்நாத் கடந்த வருடம் விஜய் தேவரகொண்டாவை வைத்து முதன்முதலாக இந்தியில் இயக்கி வெளியிட்ட லைகர் என்கிற திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. குறிப்பாக முதல் நாளிலேயே அந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது.

இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக லைகர் வெளியீட்டுக்கு முன்பே விஜய் தேவரகொண்டவை வைத்து ஆர்ப்பாட்டமாக துவங்கப்பட்ட ஜன கன மன படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து பூரி ஜெகன்நாத் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி உள்ளிட்ட சீனியர் நட்சத்திரங்களை தேடிச்சென்றும் அவர்கள் பிஸியாக இருப்பதாக கூறி பூரி ஜெகன்நாத்தை தவித்தனர். இளம் முன்னணி ஹீரோக்களும் அவர் பக்கம் தங்களின் பார்வையை திருப்ப தயாராக இல்லை. இந்த நிலையில் இயக்குனர் நடிகர் ராம் பொத்தினேனி பூரி ஜெகன்நாதத்திற்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

ஏற்கனவே ராமுக்கு ஐ ஸ்மார்ட் ஷங்கர் என்கிற ஹிட் படத்தை பூரி ஜெகன்நாத் கொடுத்துள்ளார். அதற்கு நன்றிக்கடனாக பூரி ஜெகன்நாத்திற்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் ராம் பொத்தினேனி. அதுவும் முதலில் பூரி ஜெகன்நாத் சொன்ன கதை அவருக்கு திருப்திகரமாக அமையவில்லை. அதன்பிறகு நல்ல கதையுடன் வந்தால் மட்டுமே நடிப்பேன் என்று பூரி ஜெகன்நாதிடம் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம் ராம். அதைத்தொடர்ந்து இரண்டாவதாக ஒரு புதிய கதையை தயார் செய்து ராமிடம் ஓகே வாங்கினாராம் பூரி ஜெகன்நாத்.





Source link