இதுபற்றிப் பேசிய விக்ரம், “நீண்ட நாட்களுக்கு முன், கமல் சார் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து, தான் பொன்னியின் செல்வனை எடுக்க விரும்புவதாகச் சொன்னார். அவர் அதைத் தொலைக்காட்சிக்காக எடுக்க விரும்பினார். நான் அவரிடம், முதலில் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைப் படிக்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன்.

அதன் பின், ‘இக்கதையை டிவிக்காக எடுக்கப்போவதால் இதில் நடிப்பதைப் பற்றி நீங்கள் நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு நடிகனாக நான் இதைச் செய்ய மாட்டேன்’ என்று கமல் சார் என்னிடம் கூறியிருந்தார். அடுத்த நாள், நான் அவரிடம் திரும்பி வந்து, ‘பொன்னியின் செல்வன்’ பெரிய திரைக்கு வரும் வரை காத்திருக்கிறேன் என்று சொன்னேன். ‘பொன்னியின் செல்வன்’ கதையில் நடிப்பதற்காக நான் எப்போதும் ஒருவரின் மனதில் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.