டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சோயப் மாலிக்கும் காதலித்து, கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவருமே தங்களது நாட்டுக்காகச் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடினர்.

இதனிடையே, சமீபத்தில் சானியா மிர்சாவும், சோயப் மாலிக்கும் விவகாரத்தில் செய்தி வெளியாகி உள்ளது. சோயப் மாலிக், பாகிஸ்தான் நடிகை ஆயிஷா உமருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன. அதேபோலப் பிரிவு தொடர்பான பல பதிவுகளை சானியா மிர்சாவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். ஒருவேளை இந்த வதந்திகள் உண்மையாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. கடந்த ரமலான் பண்டிகையை இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டாடவில்லை. இது வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்தது.

சானியா மிர்சா, சோயப் மாலிக்

சானியா மிர்சா, சோயப் மாலிக்

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மனைவி சானியா மிர்சா குறித்து சோயப் மாலிக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ரம்ஜான் பண்டிகையை சானியா மிர்சாவுடன் கொண்டாடத்தான் நான் விரும்பினேன். ஆனால் சில பணிகள் காரணமாக அது முடியாமல் போய்விட்டது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் அதுதொடர்பான பணிகளில் சானியா மிர்சா ஈடுபட்டு வருகிறார். அதன் காரணமாகவே நாங்கள் ஒன்றாக ரம்ஜான் கொண்டாட முடியவில்லை. நாங்கள் எப்போதும் அன்பாக இருக்கிறோம். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.Source link