இந்த நிகழ்ச்சி இந்த மாதத்துடன் 100வது அத்தியாயத்தை நிறைவு செய்கிறது. இதையொட்டி ‘Mann Ki Baat @100 (மான் கி பாத் 100)’ என்ற மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் அமீர் கான், ரவீனா டாண்டன், தீபா மாலிக் போன்ற திரைப் பிரபலங்கள், நிகத் ஜரீன் போன்ற விளையாட்டுப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ரேடியோ ஜாக்கிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அமீர் கான், ரவீனா டாண்டன்

அமீர் கான், ரவீனா டாண்டன்

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், இந்தித் திரையுலகில் பெண்கள் சந்திக்கும் ஊதிய உயர்வு குறித்துப் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய அவர், “இந்தத் திரையுலகில் கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் பணியாற்றும் பெண்கள், இன்று தங்களின் தடைகளை உடைத்து, ஒவ்வொரு கோட்டையிலும் நுழைந்துள்ளனர்.



Source link