கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ஏ.கே.டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திய அருண்குமார் என்பவர், தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால், கிரிப்டோகரன்சி மூலம் 2 மடங்காக பணத்தை திருப்பித் தருவதாகக் கூறியதாக தெரிகிறது.

அதனை நம்பி, ஆவணங்கள் முதலீடு. ஆனால், கூறியபடி பணம் வழங்கப்படாததால், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, நிறுவனத்தின் தலைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அருண்குமார் மட்டும் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நிலம் வாங்குவதற்காக அருண்குமார் தனது குடும்பத்துடன் செல்வதாக, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.

உங்கள் நகரத்திலிருந்து(கிருஷ்ணகிரி)

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

இதையும் படிக்க : அலுவலகத்தில் புகுந்து விஏஓ வெட்டிக்கொலை.. தூத்துக்குடியில் பட்டப்பகலில் பயங்கரம்

அதன்பேரில், அவர்கள் வேப்பனப்பள்ளி சென்றபோது அங்கிருந்த அருண்குமார் காரில் தப்பினார். இந்த தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஓசூர் அருகேயுள்ள பாகலூரில், காரை மடக்கிய போலீசார், அருண்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய், 12 பவுன் தங்க நகைகள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதால், 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு சூடுபிடித்துள்ளது. விரைவில் அவரிடமிருந்து பணம் மீட்கப்படும் என்றோ, பணம் இருக்கும் இடத்தையோ அவர் கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் : குமரேசன் (கிருஷ்ணகிரி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link