கோடை விடுமுறை தொடங்குவதால் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. விடுமுறையை கொண்டாடும் மக்கள் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்கு ஏற்ப வருகிற 28-ந்தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து வரும் 28-ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (06051), மறுநாள் காலை 7.45 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)
அதன்படி தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இறுதியாக காலை 7.45 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.
இந்த ரயிலில் 14 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும் 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. 18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு கட்டண ரயிலில் 14 பெட்டிகள் வழக்கமான படுக்கை வசதிகளைக் கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: