விவசாய நிலங்களில் கோடை நீர் ஆவியாவதை தடுக்க நெகிழி மண் போர்வையை பயன்படுத்தலாம் என வேளாண்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.
மண் ஈர பாதுகாப்புக்கும் பயிர் வளர்ச்சிக்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்க பயிரை சுற்றி உள்ள பகுதிகளில் தகுந்த வேளாண் கழிவுகளை மண்மீது பரப்புவது மன்போர்வை எனப்படும்.
இயற்கையாக கிடைக்கக்கூடிய வைக்கோல், வாழை மட்டை தென்னை, நாற்கழிவு, சோளத்தட்டை போன்ற வேளாண் கழிவு பொருட்கள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. இந்நிலையில் அண்மைக்காலமாக செயற்கை இழை பொருளான நெகிழி மண் போர்வையின் பயனை முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)
இவ்வகையான மண்போர்வைகள் நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கக் கூடியவை. மானாவாரி நிலத்திலும் பாசன வசதி உள்ள தோட்ட நிலத்திலும் பிளாஸ்டிக் மண் போர்வை முக்கிய பங்காற்றுகிறது வேளாண் கழிவுகளான மண்போர்வையால் மூடப்பட்ட இடங்களில் குறைந்த அளவே மழை பாசன நீர் ஊடுருவிச் செல்லும் இயலும் ஆனால் நெகிழித்தாளின் அடியில் உள்ள மண்ணில் உள்ள நீர் ஆவியாகி பின்னர் தாளின் கீழ் பகுதியில் குளிர்ந்து மீண்டும் மண்ணிலேயே விழுவதால் பிளாஸ்டிக் போர்வையின் கீழ் உள்ள மண்ணின் ஈரம் தாள் இடப்படாத மண்ணில் உள்ளது. ஈரப்பதத்தை விட சுமார் 30 சதவீதம் அதிகமாக உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மண்ணில் உள்ள நீர் நேரடியாக ஆவியாகி வெளியேறுவதையும் நீர் ஊடுருவலையும் முழுவதுமாக தடுப்பதால் . மண் ஈரம் பாதுகாக்கப்படுவதால் மண்ணில் உள்ள உப்பு மேல் நோக்கி வருவது தடுக்கப்படுகிறது. மண்ணில் இடக்கூடிய சத்துப் பொருட்கள் கலந்து பயிரின் வேருக்கு கீழ் வெளியேறி செல்வது தடுக்கப்படுகிறது இரவு மற்றும் குளிர்காலத்தில் மண்ணின் வெப்பத்தை சீரான அளவில் நிலை நிறுத்தி பயிர் சிறந்து வளர . விதைகளின் முளைவிடும் தன்மையை துரிதப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
பயிர்களின் தேவை பயன்படுத்தும் பருவம் மண்போர்வை பயன்படுத்துதல் நோக்கத்தை பொறுத்து அதற்கேற்ப நெகிழி தாள்களை தேர்வு செய்ய வேண்டும் கருப்பு நிற தாள் நிலத்தை சூடாக்கி பயிரை தாக்கக்கூடிய நூற்புழு . எல்லாவற்றையும் களை விதைகளையும் அழிக்க வல்லது . மணற் பாங்கான நீளங்களுக்கும் உப்பு நீரை . பயன்படுத்தும் நிலங்களுக்கும் ஏற்றது.
தங்கம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம் உடையதால் பூச்சிகளை கவர்ந்திழுக்கும் தன்மையுடையது அதன் மூலம் பயிர்களை தாக்கும் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் .வெள்ளை நிற தாள் குளிர்ந்த சூரிய ஒளி பரவும் இடத்தில் ஒளியினை பிரதிபலிக்கும் பயிர்களின் கீழ் மற்றும் இடையில் உள்ள இலைகள் கிடைக்கின்றன.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.