குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில் தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மேஷ ராசியினர் பங்கேற்ற குரு பெயர்ச்சி நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி பங்களா மேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குரு பகவானுக்கும், நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குரு பகவான் மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெறும் குருபெயர்ச்சி நிகழ்வு நடைபெற்றது . மேஷ ராசிக்கு குருபெயர்ச்சி ஆனதால் குரு பகவானுக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
குருபெயர்ச்சி நாளில் வர முடியாத பக்தர்கள் , மேஷ ராசி உடைய பக்தர்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ராசிக்கு உண்டான பரிகாரத்தை செய்து குருபகவானைவணங்கிசென்றனர். முன்னதாக ஆலயத்தில் தனி சன்னதியில் அமர்ந்திருக்கும் தட்சிணா மூர்த்திக்கு பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
இதையும் படிங்க | தேனியில் 40 நிமிடங்களுக்கும் வெளுத்து வாங்கிய கோடை மழை.. பொதுமக்கள் உற்சாகம்!
அதைத் தொடர்ந்து குரு பகவானுக்கும் ராகு கேது சந்திரன் உள்ளிட்ட நவகிரகங்களுக்கும் பால் தயிர் சந்தனம் தேன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. குரு பகவான் மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபெயர்ச்சி ஆன நேரத்தில் சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில்அப்பகுதியைசேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குரு பகவானே வணங்கிச் சென்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: