அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் (இ ஜீன் கரோல்) இ.ஜீன் கரோல், நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். ஐ.ஜீன் கரோல் இந்த விவகாரம் குறித்து, டொனால்டு ட்ரம்ப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஃபெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இ.ஜீன் கரோல், “1990-களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டனிலுள்ள பெர்க்டார்ஃப் குட்மேன் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பைச் சந்தித்தேன்.

அப்போது பெண்களுக்கான உள்ளாடைகளைப் பரிசாக வாங்குவது குறித்து டிரம்ப் விளையாட்டுத்தனமாக என்னிடம் ஆலோசனைக் கேட்டார். அதையடுத்து, டிரஸ்ஸிங் அறையில் என்னைத் தள்ளிவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்தார். 2019-ல் நியூயார்க் இதழால் வெளியிடப்பட்ட எனது புத்தகத்தின் ஒரு பகுதியிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தேன். அவரைப் பார்த்து பயந்துதான், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இது குறித்து வெளியே தெரிவிக்காமல் இருந்தேன்.