இந்நிலையில் விஜய்யை நேரில் சந்தித்து, தனது ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசரை கண்டு மகிழ்ந்துள்ளார் விஷால்.

சந்திப்பின் போது..

சந்திப்பின் போது..

விஷால் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து `மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்து வருகிறார். விஷால் மட்டுமல்ல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இதில் டபுள் ஆக்ஷன் என விகடனில் அந்த ரகசியத்தை உடைத்திருந்தார் ஆதிக். இந்நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாவதால், விஜய்யிடம் அதைக் காண்பித்தார் விஷால். இதுகுறித்து அவர் விஜய்யிடம் பேச, ‘நண்பனுக்காக இதைக் கூட பண்ண மாட்டேனா’ என்று சொன்ன விஜய், உடனே விஷால் டீமை வரச் சொல்லிவிட்டார்.

விஜய்யை சந்திக்கச் செல்லும் முன், முதியோர் இல்லத்தில் விஜய்யின் பெயரில் உணவு வழங்கப்பட்டது. அதற்கான ரசீதையும், பூங்கொத்தையும் கொடுத்து விஜய்யை சந்தித்தனர். விஷாலிடம் ‘மார்க் ஆண்டனி’ பற்றி கேட்டு தெரிந்து கொண்ட விஜய், டீசரை பார்த்து பாராட்டினார், விஷாலின் அடுத்த புராஜெக்ட்களையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

'மார்க் ஆண்டனி' டீமுடன் விஜய்

‘மார்க் ஆண்டனி’ டீமுடன் விஜய்

துப்பறிவாளன் -2வை இயக்கி நடிக்கறேன். அந்தப் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறேன். அடுத்து ஹரியின் இயக்கத்திலும் நடிக்கிறேன். இதன்பிறகு இயக்கத்தில் கவனம் செலுத்தப் போகிறேன். உங்களுக்கு இரண்டு கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறேன் என விஷால் சொல்ல, உடனே விஜய், `நீ வா நண்பா, நான் இருக்கிறேன். சேர்ந்து பயணிப்போம்’ என்று சொல்லி விஷாலுக்கு விடை கொடுத்திருக்கிறார். உற்சாகமாக விடைபெற்று வந்திருக்கிறார் விஷால்.Source link