கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொய்கை அணை சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்களில் ஒன்றாக உங்கள் பட்டியலில் சேர்த்துக்கோங்க. அணையின் அழகும் குளிர்ந்த காற்றும் உங்களுக்கு சுகமான அனுபவத்தை கொடுக்கும்.

பொய்கை அணையானது நாகர்கோவிலில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், ஆரால்வாய்மொழியில் இருந்துசுமார் 4 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த அணைக்கு போகும் விழியில் பசுமையான வயல்வெளிகளையும், மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.

இந்த அணை, மேற்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் இருக்கக்கூடிய பொய்கை மலையின் அடிவாரத்தில்தான் அமைந்துள்ளது. அணைக்கு செல்லும் வழியில் அணையில் இருந்து வரும் நீரி செல்லும் பாதைகளையும், மறுகால் கட்டமைப்பையும் பார்க்க முடியும். அங்குள்ள ஒரு பாலத்தில் இருந்து தண்ணீர் பாய்ந்து வரும் காலங்களில் பார்த்தால் ஸ்டெப் ஸ்டாக அருவிபோல் தண்ணீர் கொட்டுவதை பார்த்துக்கொண்டே இருக்கும்.

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

பொய்கை அணை

இந்த அணைக்கு அருகாமைவரையில் வாகனங்கள் செல்ல முடியும், அங்கருந்து பார்த்தால், ஆங்காங்கே உயரமாக நின்று சுழலும் ஏராளமான காற்றலைகள் பார்க்கமுடியும். இந்த காட்சி மிகவும் அழகாக இருக்கும். வேகமாக வீசும் காற்றையும் இங்கே உணர முடியும். இந்த அணையின் வலதுபுறம் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர் அமைந்துள்ளது. இடதுபுறம் அணையின் உபரிநீர் பாயும் கட்டமைப்பு உள்ளது.

இந்த அணை கட்டியதில் இருந்து ஒரே ஒருமுறை மட்டுமே அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்ததாகவும், அதேசமயம் இந்த அணையின் நீர் முழுவதும் வற்றியதே இல்லை எனவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க : தென்னை, பாக்கு சாகுபடி செய்வது எப்படி? நாமக்கல்லில் இலவச பயிற்சி!

இந்த அணையின் கரையில இருந்து மலையின் அழகை பார்க்கும் வியூ மிகவும் அழகாக இருக்கும். இந்த அணையில் முதலை போன்றவை இல்லை என்பதால், நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் உரிய பாதுகாப்புடன் நீரில் இறங்கி குளிக்கலாம்.

இந்த அணை, பொய்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அணையின் கட்டுமானப் பணிகள் 2000ஆவது ஆண்டில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அணையின் உயரம் 44.65 அடியாகும். குமரி மாவட்டம் கடுக்கரைக்கு மேல் காட்டுப்பகுதியில் உள்ள இரப்பையாறு மற்றும் சுங்கான் ஓடை இரண்டும் இந்த அணையின் முக்கிய நீராதாரமாக உள்ளது.

மேலும் படிக்க : நாமக்கல் மெட்டாலா ஆஞ்சநேயர் கோயிலில் இத்தனை சிறப்புகளா? குரங்குகளை கொண்டாடும் கிராம மக்கள்!

இந்த அணையில் இருந்து நீரைத் திறந்துவிடுவதற்கு ஆறு மதகும், வாய்க்கால் மதகும் அமைக்கப்பட்டுள்ளன. ஆறு மதகு மூலம் கரும்பாட்டு குளம், கிருஷ்ணன் குளம், பொய்கை குளம், குட்டி குளம், செண்பகராமன் பெரியகுளம், தோவாளை பெரிய குளம், வைகை குளம் மற்றும் ஆரல்வாய்மொழி பெரிய குளம் ஆகிய 8 குளங்களுக்கு நீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த லெட்சுமி புதுகுளம், அனுவத்தி குளம், அத்தி குளம் மற்றும் இராதாபுரம் வட்டத்துக்குட்பட்ட சாலை புதுக்குளம், தெற்கு சிவகங்கை குளம், மேல பாலாறு குளம், கீழ பாலாறு குளம், பழவூர் பெரிய குளம் ஆகியவை வாய்க்கால் மதகு மூலமும் பாசனவசதி பெறுகின்றன. இந்த குளங்களின் மூலமாக 1,357 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link