விருதுநகரில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கல்கி எழுதிய புனைவு கதையான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்ட நிலையில், தற்போது மணிரத்னம் அதில் வெற்றி கண்டுள்ளார். மொத்தம் இரண்டு பாகங்களாக தயாரான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இரண்டாம் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் நாள் காட்சிக்கே பெண்கள், குழந்தைகள் என பலர் குடும்பமாக வந்திருந்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
முதல் பாகத்தில் வந்தியத்தேவன் அனைவரின் மனதிலும் இடம் பிடித்ததை போல இதில் ஆதித்த கரிகாலன் அனைவரையும் கவர்ந்துள்ளார்.படம் பார்த்த ரசிகர்கள் பலர் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவே வாழ்ந்துள்ளனர்.
முதல் பாகத்தை போல இதில் பெரிதாக பாடல் இல்லை என்றாலும் கதை சுவாரஸ்யமாகவே நகர்ந்தது என்றனர்.
மொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் நீண்ட கனவாக இருந்த பொன்னியின் செல்வன் தற்போது முழுமையாக நிறைவேறி விட்டது. இனி இது போல் நிறைய வரலாற்று படங்களை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: