இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்தில் இருந்து வறுமையின் காரணமாக சென்னை வந்து செக்யூரிட்டி வேலையை செய்து வந்தார் ஜான் குஜூர். இவருக்கு 26 வயது ஆகிறது. ஜானின் வருமானத்தை நம்பியே அவரது குடும்பத்தினர் வந்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு உடலில் அம்மை நோய் ஏற்பட்டதாக தெரிகிறது. நோய்க்காக அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சிகிச்சை பலனின்றி அந்த இளைஞன் இறந்துள்ளார். அவரது நண்பர் மூலமாக இறந்த செய்தி அசாமில் உள்ள அவரது குடும்பத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

குடும்பத்தினர் அவர் இறந்த செய்தியை கண்டு கதறியழுதனர். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். மேலும் அவரது உடலை எப்படி அசாமிற்கு கொண்டு வருவது என்ற வழிமுறைகள் தெரியாமல் உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் இருந்தனர். இந்த நிலையில் ஜானின் குடும்பத்தினர் தங்களது சொந்த மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு ஜானின் உடலை அசம்பாவிதம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

உடனடியாக அந்த மாவட்ட ஆட்சித் தலைவர், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை மீட்டு அசாமிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் R-SOYA நிறுவனரும் திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தின் பொறுப்பாளருமான சரவணன் தலைமையில் பசியில்லா தமிழகத்தைச் சார்ந்த முகமது அலி ஜின்னா உடனடியாக தென்காசியில் இருந்து சென்னைக்கு ரயிலில் புறப்பட்டு சென்றார்.

அங்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்திற்கு சென்று பட்டினப்பாக்கம் காவல்துறை உதவியுடன் அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் சென்னையில் உள்ள தன்னார்வ அமைப்பு கருணை உள்ளங்கள் குழுவினர், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனை செய்து உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்று, உடலை பதப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் செய்தனர்.

மேலும் பார்க்க… மணல் கொள்ளையர்கள் மிரட்டல்… போலீஸ் பாதுகாப்புடன் ஆடு மேய்க்கும் விவசாயி…!

அதன் பிறகு விமானம் மூலம் அவரது உடலை கொண்டு செல்வதற்கான அரசின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி அவரது உடலை நல்ல முறையில் தமிழகத்தில் இருந்து அசாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் அசாமில் உள்ள அவரது குடும்பத்தினருடன் அவர்களது மொழியில் R-SOYA தன்னார்வலர் திவ்யா பேசி ஆறுதல் கூறினார்.

பின்னர் இங்கு உள்ள சூழ்நிலைகளை விளக்கி உடனுக்குடன் தகவல் கொடுத்து வந்தார். ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்வு சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படத்தில் நடந்தது போல் இருந்தது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link