ராமேஸ்வரம் அமிர்த வித்தியாலயம் பள்ளியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் சங்கல்ப் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இலவசமாக கடல்பாசி வளர்ப்பு, அழகுக்கலை, தையல் போன்ற பயிற்சிகள் அளித்து பெண்கள் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகமானது உலக வங்கியுடன் இணைந்து பெண்கள் குறுகிய காலத்தில் நீண்டகால பயன்பெறும் வகையில் பெண்கள் மேம்பாட்டிற்காக ‘சங்கல்ப் எனும் தொழில் திறன் மேம்பாடு மற்றும் அறிவு விழிப்புணர்வு எனும் திட்டம் உள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் சுயதொழில் தொடங்கவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 3 மாதங்கள் இலவசமாக தையல், அலகுகலை, கடல்பாசி வளர்ப்பு போன்ற பயிற்சிகள் பெண்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும், இதில் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள அமிர்த வித்தியாலயம் பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

இலவசமாக சுயதொழில் புரிய பயிற்சி
இதையும் படிங்க : ஹெல்மெட் போடுற ஃபைன் தான்.. தஞ்சையில் வாகன ஓட்டிகளுக்கு பாரபட்சமின்றி அபராதம்..
இப்பயிற்சியில் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தையல் மற்றும் அலகுகலை பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் ஓலைக்குடா கிராமத்தில் கடல்பாசி வளர்ப்பு பற்றிய பயிற்சியும் பெற்று வருகின்றனர். காலை முதல் மதியம் வரை 100 பேருக்கும், மதியத்தில் இருந்து மாலை வரை மற்றொரு 100 பேருக்கும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் பயிற்சி பெரும் பெண்கள் கூறும் போது, இலவசமாக பயிற்சி அளித்து, 3 மாத பயிற்சி முழுமையாக முடிந்த பிறகு மத்திய அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் 3000 ஊதியமும் வழங்கப்படுகிறது. இதில் கற்றுக் கொண்டு தையல் பயிற்சி மூலம் நாங்கள் வீட்டில் இருந்தபடியே துணிகள் தைத்து ஒருநாள் ரூ.500-முதல் ரூ.1000 வரை வருமானம் பெறமுடியும்.
மேலும், அலகுகலை பயிற்சி கற்றுக்கொண்டு அழகு நிலையத்தை வைக்க முடியாவிட்டால் கூட தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையோ, தங்களையோ உடலை பராமரித்துக்கொள்ள முடியும் என்று கூறுகின்றனர். இந்த பயிற்சியானது 3 மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
3 மாதங்கள் முடிந்த பிறகு பத்திரிகை நாளிதழ்களில் விளம்பரம் படுத்தப்பட்டது . ஆர்வமுள்ள பெண்கள் இதில் சேர்ந்து கற்றுக்கொள்ளுங்கள் என்றும் பயிற்சி பெரும் பெண்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: