மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பின்றி இடிந்து விடும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை அடுத்து பள்ளிக்கல்வித்துறை விழித்தெழுந்து பள்ளி கட்டிடங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அவ்வாறு திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் கிராமத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அதன் பின்னர் 1965 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஆட்சியின் போது திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சொக்கலிங்கம் அவர்களால் அரசு ஆதிதிராவிடர்நலதொடக்கப் பள்ளியாகஓட்டுகட்டிடத்துடன் திறக்கப்பட்டது.

இதில் ஆலத்தூர், கல்கண்டார்கோட்டை, கீழக்குறிச்சி, சோழமாதேவி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் இப்பள்ளியில் பயந்து வந்தனர். பலரை உயர்த்திய பள்ளி தற்போது விடிய திமுக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் திறனற்ற தன்மையால் 24 மாணவர்கள் மட்டுமே பயிலும்அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)

இதையும் படிங்க : தஞ்சை பெரிய கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலைகள்.. பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள்!

தமிழக அரசின் உத்தரவின்படி மராமத்து செய்யப்பட வேண்டிய இப்பள்ளி முழுவதும் இடிக்கப்பட்டு அதன் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தளவாட பொருட்கள் அனைத்தும் இரவோடு இரவாக எடுத்துச் செல்லப்பட்டது.

தற்போது பள்ளி இருந்த சுவடு தெரியாமல் பள்ளிக்கான பலகை மற்றும் உடைந்த கரும்பலகை, விளையாட்டு உபகரணங்கள், கழிப்பிட வசதி கட்டடம் மட்டுமே தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க பள்ளி கட்டிடத்தை இடித்து 9 மாதங்கள் ஆகியும் புதிதாக பள்ளிக்கட்டிடம் கட்டயிலும் எந்த ஒரு நிதியும் ஒதுக்காமல் அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளாமல் பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மெத்தன போக்குடன் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் தற்காலிகமாக ஆலத்தூரில் பராமரிப்பு இல்லாத நூலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றனர். மழை கட்டிடங்கள் பெயர்ந்து, உடையும் நிலையில் உள்ள நூலக கட்டிடத்தில் அடுத்து நிகழப்போகும் அசம்பாவிதங்கள் ஏதும் அறியா வகையில் பிஞ்சு குழந்தைகள் படித்து வருகின்றனர்.

மேலும் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு சமைக்க உரிய வசதி இல்லை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு என சொல்ல முடியாத அவலங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனால் மோசமான நிலையில் இயங்கும் இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க விரும்பாத பெற்றோர்கள் மற்றும் இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களை கூட தூரத்தில் உள்ள பள்ளிகளில் சேர்த்து வருவதால் இங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்பள்ளியின் நிலையை சற்றும் காதுகொடுத்து கேட்க கூடிய நிலையில்கூட இல்லை என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியரிடம் கூட மனு அனுப்பப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் , மாணவர்களின் எதிர்காலம் பள்ளிக்கான புதிய கட்டிட கட்டுமான பணிகள் விரைவில் துவங்கி திறப்பு விழா காணாவிட்டால் காலபோக்கில் மாணவர் சேர்க்கை குறைந்து பள்ளிக்கு மூடுவிழா நடத்தப்படும் போது எள்ளளவும் ஐயமில்லை என அப்பகுதி பொதுமக்கள்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link