மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தைக்கால் பிரம்பு அருகே உள்ள பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளதால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாக பிரம்பை கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரியப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. முதலில் சாதாரண குடிசைத் தொழிலாக தொடங்கிய பிரம்பு பொருட்கள் தயாரிப்பு தற்போது இரண்டு கி.மீ தூரம் சாலை இருபுறமும் 200க்கும் மேற்பட்ட உற்பத்திக் கூடங்களும் விற்பனையகங்களும் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் பிரம்பு பொருட்கள் புவிசார் குறியீடு பெரும் பாரம்பரியமும் தரமும் வாய்ந்தது.

உங்கள் நகரத்திலிருந்து(மயிலாடுதுறை)

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

இதனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிரம்பு பொருட்களான நாற்காலி, ஊஞ்சல், சோபா செட், அலமாரி, குழந்தைகள் தொட்டில், பிரம்பு கூடைகள் மற்றும் மிகுந்த கலைநயம் மிகுந்த கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் பிரம்பினால் ஆன சேர், சோபாவில் உட்காரும் போதும் உடல் சூட்டை பாதுகாத்து ரத்த ஓட்டத்தை சீராக்க கூடியது.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலைகள்.. பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள்!

எனவே இதை அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்த பிரம்பு பொருட்கள் உற்பத்தி தொழிலை நம்பி தைக்கால், சாமியம், ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம், சீயாளம், பெரம்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணிகளே அதிகம் பிரம்பு பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.

தற்போது புவிசார் குறியீடு பெறுவதற்கான பணிகள் நிறைவடைந்து விரைவில் புவிசார் குறியிடு கிடைக்க உள்ளதால் பிரம்பு பொருட்களை தயாரித்து விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தைக்கால் கிராமத்தை சேர்ந்த பிரம்பு தயாரிப்பாளர் கூறுகையில், ‘கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் விற்கப்படும் பிரம்பு வகைகள் முதல் தரம் 2 தரம் என ஐந்து வகையாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப சேர், நாற்காலி, ஊஞ்சல் குழந்தை தொட்டில் ,குழந்தைகள் உட்காரும் நாற்காலி, முதியவர்கள் பயன்படுத்தும் சாய்வு நாற்காலி, சோபா செட் ஆகியவை கலை நயத்திற்கு தகுந்தாற்போல் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு விற்கப்படும் பொருட்கள் ரூ.750 லிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர் எனவும் தங்களது தொழிலை மேம்படுத்த கடன் உதவி வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணப்பாறை முறுக்கு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை உள்ளிட்ட 11 பொருட்கள் வரிசையில் தைக்கால் பிரம்பிற்கும் புலி சார் குறியீடு உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் கைவினைப் பொருட்களின் விற்பனை சூடு பிடிக்கும்.

செய்தியாளர்: பிரசன்னா வெங்கடேசன், சீர்காழி.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link