இயக்குனர் மணிரத்தினம் இயக்குனர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி,திரிஷா,ஐஸ்வர்யா ராய், போன்ற பெரும் பட்டாளங்கள் நடித்த பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. இதன் திரை விமர்சனத்தை பற்றி தஞ்சை மக்களின் கருத்தை காணலாம்

முதல் பாகம்:

பொன்னியின் செல்வன்’ நாவலின் கதை வந்தியத்தேவன் கதாபாத்திரம் வழியாக முதல் பாகத்தில் கடத்தப்பட்டது. கடம்பூர் மாளிகையில் நடக்கும் சதித் திட்டத்தை அறிந்துகொள்ளும் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், தன் உற்ற தோழனான வந்தியத்தேவன் மூலம் அங்கு நடக்கும் விஷயங்களை தன் தந்தை சுந்தர சோழரிடமும் சகோதரி குழந்தையிடமும் தெரிய வைக்கிறான்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

இருவரையும் சந்திப்பதற்குள் சோழ தேசத்தின் சதிகாரர்கள் கும்பலைச் சேர்ந்தவர்கள் கண்ணில் எல்லாம் வந்தியத்தேவன் சிக்குகிறான். குந்தவையின் ஆணைக்கிணங்க அருண்மொழிவர்மனை அழைத்து வர அவன் இலங்கைக்கு செல்கிறான்.

மறுபக்கம் கண்டராதித்தரின் மகன் மதுராந்தகன், தன் தந்தையின் விருப்பத்தையும், தாயின் ஆணையையும் மீறி மணிமுடிக்காக காத்துக் கொண்டிருக்கிறான். சோழ நாட்டின் நிதியமைச்சரான பெரிய பழுவேட்டரையரும் சிற்றரசர்களும் அவருக்கு துணை நிற்கின்றனர்.

பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி, பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சோழ நாட்டுக்கு எதிராக சதியில் இறங்குகிறாள். அதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள சோழ இளவரசன் அருண்மொழிவர்மனை சிறைபிடித்து வர பெரிய பழுவேட்டரையரால் ஆணையிடப்படுகிறது. தவறுதலாக வந்தியத்தேவனை எதிரிகள் அருண்மொழி என கருதி சிறைபிடித்து செல்வார்கள்.

அவனைக் காப்பாற்ற நடுக்கடலில் செல்லும் கலத்திற்கு அருண்மொழிவர்மன் செல்கின்றான். அங்கு நடக்கும் கலவரத்தில் கடலில் கலம் மூழ்குகிறது. இறுதியில் சோழர்களில் யாருக்கு ஆபத்து நடந்தது என்ற கேள்விகளுடன் முதல் பாகம் முடிந்தது.

இரண்டாம் பாகம்

ஊமை ராணியால் அருண்மொழிவர்மன் காப்பாற்றப்படுவதில் இரண்டாம் பாகம், ஆதித்த கரிகாலன் -நந்தினி இடையே பகை, முடிசூடுதல், வந்தியத்தேவன் – குந்தவை காதல் என்று பயணிக்கிறது.

பொன்னியின் செல்வம் -2 படம் எப்படி இருக்கிறது என்று தஞ்சை மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்வோம். படம் எதிர்பார்த்ததைப் பூர்த்தி செய்தது. முதல் பாகத்தில் உள்ள குழப்பங்களுக்கு இரண்டாம் பாகத்தில் பதில் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு நடிகரும் போட்டி போட்டு நடித்து தங்களது கேரக்டரை பவர்ஃபுல்லாக காட்டியுள்ளனர். முதல் பாகம் மெதுவாக சென்றது. ஒருவேளை மூன்றாவது பாகம் இருக்குமோ என்ற குழப்பத்தில் இருந்தால் போதும் அடுத்தடுத்த திருப்பங்களை கொடுத்து பரபரப்பாக அடுத்தடுத்து சீன்கள் நகர்ந்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் மாசாக உள்ளது.

இறுதியில் பெரிய கோயிலை காட்டி இருந்தால் சூப்பராக இருந்திருக்கும். சோழ நாட்டு மக்கள் அவசியம் இப்படத்தை பார்க்க வேண்டும். இந்த காலத்து படம் போல் இல்லை. அந்த காலத்து படம் போல் இருக்கின்றது. தமிழ் சினிமாவின் ஆச்சர்ய டைம் ஃபேவரைட் மூவியாக இந்த படம் மாறும் என்பதில் ஒவ்வொருவரும் தங்களது பாசிட்டிவான கமெண்ட்களை படத்திற்கு கொடுத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.Source link