புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டில், 700 காளைகள் பதிவு செய்த நிலையில், தொடர்ந்து பெய்த கனமழையால் 377 காளைகள் மட்டுமே களம் கண்டன. இதில் 167 மாடுபிடி வீரர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கினர். இப்போட்டியில் 21 பேர் காயமடைந்தனர் இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழா

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

முன்னதாக கோவில் காளைகள் அனைத்தும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு முதலில் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் பாபு தலைமையில் 31 பேர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசல் அனுப்பப்பட்டனர்.

இதையும் படிங்க : சர்வதேச நடன தினம்.. நடனத்தின் சிறப்பை விளக்கும் செங்கல்பட்டு கலைஞர்!

போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணமுடிப்பு, சைக்கிள், எல்இடி டிவி, மின் விசிறி, சில்வர் அண்டா, வெள்ளி காசு உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்நிலையில், பார்வையாளர்கள் திடலின் இருபுறமும் திரண்டு நின்று போட்டியை கண்டு ரசித்தனர்.

மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 2 மருத்துவர்கள் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் காயம் அடைந்தவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளித்தனர். இதில் 7 பேர் மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் திடலின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி காயத்ரி தலைமையில் போலீசார், ஊர்காவல்படையினர் என மொத்தம் 132 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link