இந்தியாவில் இனி எந்த ஒரு ஓட்டுநர்களையும் அரசு அதிகாரிகள் மற்றும் சமூக விரோதிகளால் தாக்கப்படக்கூடாது
தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து அறவழி போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த போராட்டத்தில்
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
அப்போது ஓட்டுனர் மீது கொலைவெறி தாக்குதலை நடத்திய குவாலியர் ஆர்.டி.ஓ-வை கைது செய்ய வேண்டும், வாகனத்தை வழிமறித்து லஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும், ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழி போராட்டம் நடத்தப்பட்டது.

தஞ்சையில் ஓட்டுநர் சங்கத்தினர் அறவழி போராட்டம்
இதுகுறித்து ஓட்டுனர்கள் தெரிவித்தனர், “ஓட்டுனர் மீது கொலைவெறி தாக்குதலை நடத்திய குவாலியர் ஆர்.டிஓ-வை கைது செய்ய வேண்டும், ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. லஞ்ச உச்சமாய் இருக்கும் சோதனை சாவடிகளில் நாங்கள் படும் பாடு, ஒன்றல்ல இரண்டல்ல இரவு முழுவதும் கண்விழித்து வாகனம் ஓட்டும் எங்கள் பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அத்திப்பள்ளி சோதனைச் சாவடியை அகற்ற வேண்டும், எங்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை ஓட்டுநர் உரிமம் பெறும்போதே இனித் தர வேண்டும், மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுநர் மற்றும் அரசு அதிகாரிகள் இரும்புக்கரம் கொண்டு வருவதை தடுக்க வேண்டும், லஞ்சத்தை தடை செய்ய வேண்டும், வாகனத்தை வழிமறித்து லஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும், ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோஷம் எழுப்பினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் தமிழ் நாடு தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சை ரயில்வே நிலையம் அருகே நடந்த இந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து போலீசார் மாற்று பாதை வசதியை ஏற்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: