ஐபிஎல் தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் சென்னை – பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள சென்னை அணிக்கும், 6வது இடத்தில் உள்ள பஞ்சாயத்து அணிக்கும் இன்றைய போட்டி முக்கியம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை கேப்டன் ஷிகர் தவான் தோல் பட்டை காயத்தில் இருந்து மீண்டும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். பஞ்சாப் அணி தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அதர்வ தைடேவின் ஆட்டம் பஞ்சாப் அணிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. அந்த அணியில் முக்கிய வீரர்களாக திகழும் லிவிங்ஸ்டன், சிக்கந்தர் ராசா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்டோர் தங்களின் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளனர்.

ஐபிஎல் குறித்து அனைத்து விவரங்களையும் அறிய இதனை கிளிக் செய்யவும்

அவர்களின் ஆட்டம் ஜொலித்தால் பஞ்சாப் அணிக்கு மேலும் பலம் சேர்க்கும். ஆல்ரவுண்டர் சாம் கரனும் தன் பங்குக்கு இரண்டிலும் ஓரளவு பங்களிப்பை அளித்து வருகிறார். பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுவது பந்துவீச்சுதான். ஆனால் அதுவும் கடந்த போட்டியில் சுக்குநூறாக உடைந்துவிட்டது. லக்னோ அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பஞ்சாப் அணி 257 ரன்களை கொடுத்து சோதப்பியது. அந்த தவறுகளை இந்த போட்டியில் செய்யாமல் இருக்க பல் வியூகங்களை வகுத்து வருகிறது பஞ்சாப் அணி. ரபாடா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் வேகப்பந்து வீச்சாளராக பலன் சேர்த்து வருகின்றனர். மேலும் ராகுல் சாஹாரும் சுழலில் கடந்த போட்டியில் மிரட்டினார். சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அதற்கு ஏற்றது போல் அணியை தயார் செய்து வருகின்றனர்.

சென்னை அணியைப் பொறுத்தவரையில் தொடர் தொடக்கத்தில் பந்துவீச்சில் சொதப்பி வந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் தவறுகள் நடந்தன. சென்னை அணிக்கு தீபக் சாஹர் இல்லாத நிலையில், துஷார் தேஷ்பாண்டே 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், அதிக ரன்களை தாரை வார்ப்பது கவலை அளிக்கிறது. இளம்களான ஆகாஷ் சிங் மற்றும் பத்திரனா சிறப்பான பந்துவீச்சை வீசினால் சென்னை அணி இன்று ஆதிக்கம் செலுத்துகிறது.

பேட்டிங்கை பொறுத்தவரை சென்னை அணி தற்போடு கூடுதல் பலம். ருத்துராஜ் மற்றும் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராயுடு இம்பாக்ட் வீரராக வந்தாலும் அதிரடி ரன் குவிக்காமல் இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் அசத்தி வரும் சிவம் தூபே தொடர்ச்சியாக மூன்று தொடரில் அரைசதம் அடித்து மிடில் ஆர்டரில் அசுர பலத்துடன் இருக்கிறார். மேலும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் மட்டுமே தனது பங்களிப்பை அளித்து வருவது சென்னை அணிக்கு மற்றொரு சோதனையாக பார்க்கப்படுகிறது. கடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா பவுண்டரிகள் அடிக்க திணறியதால் தோல்வியடைந்தது என்று கூட கூறலாம்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தால் விளையாடாமல் இருப்பதால் இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர் பந்துவீசுவராக என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சென்னை அணி தனது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். சென்னை அணி சும்மாவே எங்கு சென்றாலும் மஞ்சள் படையாக மைதானம் முழுவதும் இருக்கும். ஆனால் சொந்த மைதானத்தில் விளையாடினால் சென்னை அணிக்கு ரசிகர்கள் பேராதரவு இருக்கும் என்பது எந்த சந்தேகமும் இல்லை.

கனிக்கப்பட்ட சென்னை அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், மஹீஷ் தீக்ஷனா

கணிக்கப்பட்ட பஞ்சப் அணி:

அதர்வா டெய்டே, ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link