* காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் இருக்கலாம்
* ஆடுகளைப் பொறுத்தவரை குட்டிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதைத்தவிர்க்கக் குட்டிகளை ஆடுகளோடு மேய்க்கவிடாமல் தனியாகப் பராமரிக்கவேண்டும்.
* குளியல் தொட்டிகளில் வெயில் நேரத்தில் கால்நடைகளை விடுவதன் மூலம் அவற்றின் உடல்வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
தண்ணீரின் அவசியம்…
* கால்நடைகளுக்கு எப்பொழுதும் தண்ணீர் கிடைக்குமாறு தண்ணீர் தொட்டியை அமைத்திருக்க வேண்டும்.
* வெயில் காலங்களில் ஒரு நாளில் 5-6 முறை சுத்தமான மற்றும் குளிர்ந்த நீரை அளிக்கலாம்
* பால் உற்பத்தி செய்யும் மாடுகளுக்கு கூடுதல் தண்ணீர் கொடுக்க வேண்டும்.
* தண்ணீர் வழங்கும் தொட்டி வெள்ளை நிறத்தில் இருந்தால் கால்நடைகளுக்கு நீர் குளிர்ச்சியாக இருக்கும்.
* கால்நடைகளில் நேரடியாக தண்ணீர் தெளிப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சியை குறைக்கலாம்.
* கலப்புத் தீவனம் உட்கொண்டபிறகு நீர்வைத்தால் அதிகமாகக் குடிக்கும் இதன் மூலம் தண்ணீர் உட்கொள்வதை அதிகரிக்கலாம்.
* தண்ணீருடன் சிறிதளவு உப்பு அல்லது கலப்புத் தீவனம் கலந்து அளித்தாலும் மாடு நீர் அதிகமாக அருந்தும்.