நாமக்கல் மாவட்டம் அக்கியம்பட்டியைச் சேர்ந்தவர் எம்.சி.ஏ. பட்டதாரி விக்னேஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் லட்சத்தில் சம்பளம் பெற்று வந்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, தனது வேலையை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தின்போது இனி வரும் நாட்களில் அந்நிய நாட்டு பொருட்களை பயன்படுத்த கூடாது என முடிவெடுத்தார். அதன்படி அத்தியாவசிய பொருட்களான சோப்பு, ஷாம்பு போன்றவை கூட இயற்கை பொருட்களை பயன்படுத்த துவங்கினார்.
அதுமட்டுமின்றி தனது தாய் தந்தையரையும் பயன்படுத்த வைத்தார். முகப்பூச்சு பவுடர், இயற்கை ஹேர் டை, சிறுதானிய உணவுகள், மரப்பொருட்கள் என அனைத்தையும் இயற்கை பொருட்களையும் பயன்படுத்த துவங்கினார். இவரை முதலில் ஆச்சரியமாக பார்த்த அவரது உறவினர்கள், சில நாட்களில் அவர்களும் இயற்கை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இயற்கை அங்காடி நடத்தும் நாமக்கல் எம்சிஏ பட்டதாரி இளைஞர்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஷாம்பு மற்றும் குளியல் சோப்புகளை விக்னேஷிடம் வாங்க தொடங்கினர். நாளடைவில் இதனை ஏன் நாமே தொழிலாக தொடங்கக் கூடாது என எண்ணிய விக்னேஷ். அதன்படி தன்னிடம் உள்ள சிறிய தொகையை வைத்து தனது சொந்த ஊரான அக்கியம்பட்டியிலேயே சிறிய அளவிலான இயற்கை அங்காடியை தொடங்கினார்.
இதையும் படிங்க : அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடைகள் அகற்றம்.. கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி..
இதனைத்தொடர்ந்து, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் இயற்கை பொருட்களை வாங்க தொடங்கியதால் நாமக்கல்லில் பெரிய அளவில் கடையை தொடங்கினார். அதன்படி அக்கியம்பட்டியில் கிடைத்த லாபத்தை வைத்து கடந்த ஆண்டு நாமக்கல் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலின் அருகே “பாலா இயற்கை அங்காடி” என்ற பெயரில் இயற்கை பொருட்களை விற்பனை செய்ய தொடங்கினார்.
இந்த கடையில், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஷாம்பு, சோப்பு, ஹேர் டை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மசாலா பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், செக்கு எண்ணெய், சிறுதானியங்கள், பழமையான அரிசி வகைகள், மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள், வாழை நார் கொண்டு செய்யப்பட்ட கைவினை பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட கலன்கள், பாத்திரங்கள் , பானைகள், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இவரின் இந்த இயற்கை அங்காடி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து விக்னேஷ் கூறினார், “ஐடி வேலையை உதறிவிட்டு இந்த தொழிலில் இறங்கியிருப்பதாகவும், தற்போது இயற்கை உணவு மற்றும் இயற்கை பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி வருவதாகவும், இதேபோல் நஞ்சற்ற உணவுகளை உண்ணும்போது உடல் ஆரோக்கியம் மேம்படும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இயற்கை பொருட்களின் மீது நாளுக்கு நாள் மக்களின் வரவேற்பு அதிகரித்து வருவதாகவும், தன்னிடம் எந்தவொரு பிளாஸ்டிக் பொருட்களும் இல்லாததாலும், செயற்கையான கெமிக்கல்கள் கலந்த பொருட்கள் இல்லாததாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்” என தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
லட்சத்தில் சம்பளம் வந்த ஐடி வேலையை உதறி தள்ளினாலும் மக்களுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களை விற்பனை செய்வது மனதுக்கு நிம்மதி தருகிறது என்கிறார் விக்னேஷ். ஐடி வேலையை விட்டு பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விக்னேஷின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: