உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படைத் தேவைகள் சரியான முறையில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். உள் மாவட்டங்கள் மட்டுமன்றி பிற மாநிலங்களான கர்நாடக,கேரளா போன்ற பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உதகை நகருக்குள் நுழையும் பகுதிகளில் நிறுத்தப்பட்டு சுற்று பேருந்து மூலம் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சுற்றுலா தளங்கள் அனைத்தும் நன்றாக பராமரித்து வந்தாலும் நகரில் பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல், சாலை வசதி இல்லாததால் பல சுற்றுலா தலங்களை காண முடிவதில்லை மேலும் தங்கும் விடுதிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகவும் இடைத்தரகர்களின் தலையீடு உள்ளதால் இரண்டு நாட்கள் தங்கி சுற்றி பார்க்க நினைப்பவர்கள் ஒரே நாளில் திரும்பிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)

இதையும் படிங்க: மக்களே உஷார்” மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

குறிப்பாக நகரில் பல பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் சுற்றுலா பயணிகள், நடுத்தர குடும்பங்கள் சுற்றுலாவிற்கு வருகை புரிந்ததால் அவர்களால் தங்கும் விடுதிகளுக்கும் உணவகங்களில் உள்ள விலையேற்றமும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் கோடை சீசனில் சுற்றுலா நகரில் நடைபெறும் அத்து மீறல்களை உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை சீசன் இந்த மாதம் முழுவதும் நடைபெறவுள்ளதால் பயணிகள் முகம் சுளிக்காமல் வந்து செல்ல சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியாளர்: அய்யாசாமி (நீலகிரி)

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link