அடுத்தது சமையல்.. அதுக்காளி ரசமானாலும் சரி வெஜிடபிள் பிரியாணியாக இருந்தாலும் சரி.. நானே புளியை கரைத்து (இதமாய் பதமாய்) போடவேண்டிய சாமான்களைப் போட்டு பச்சை மல்லி தழையைத் தூவி இறக்கி, சூடான சோற்றில் வளைக்கரங்களால் ஊற்றி , (சிலசமயம் கையில் வாங்கிக் குடிப்பார் மாமா) எதையோ பெரிதாக சாதித்தது போல் ஒரு உணர்வு வரும்.
அதே போல்தான் வெஜிடபிள் பிரியாணியும் காய்கறிகளை எல்லாம் பார்த்து நறுக்கி , தாளிப்பு சாமான்களை போட்டு , பாஸ்மதி அரிசியை சேர்த்து ‘தம்’ போட்டு இறக்கி( அரிசி குழையாமலும், அதேசமயம் வேகாமலும் இல்லாமல் மசாலா எல்லாம் உள்ளே ஊறி) நெய்யில் வறுத்த முந்திரிதூவி சுட சுட பரிமாறினால் கோபமாவது… சொர்க்கம் சொக்கம்பாஸ் சந்தையாவது… .
இப்படி எல்லாவீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வதில் தான் எனக்கு பூரண திருப்தி. என் உயிர் இதில் தான் அடங்கி இருக்கிறது… என்று நானே முதுகில் தட்டிக் கொள்வேன். உடல் நலனும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக மன நலன்!
(இது என் தனிப்பட்ட கருத்து யாரையும் புண்படுத்துவன அல்ல)
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.