திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி பாலியல் தொல்லை சம்பவம் நடந்து வருகிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொது செயலாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு சென்றார். அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக எடப்பாடி செல்லும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து சேலம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட வெள்ளரிவெள்ளி பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார்.
உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)
அப்போது அவர் பேசும்போது, ”2011க்கு முன்பு வரை சாலைகள் எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பேருந்து வசதி செய்து கொடுத்ததும் அதிமுக தான். இந்த பகுதி மக்களின் கோரிக்கையான வெள்ளரி வெள்ளி ஏரியை நிரப்பினோம்.
பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை எடுத்து வைக்கின்றோம். திருமண மண்டபத்தில் கூட மதுக்கடை திறக்க முயற்சி செய்தார்கள். கடுமையான எச்சரிக்கையின் காரணமாக அது நிறுத்தப்பட்டது.நகர் பகுதியில் உள்ள மக்கள் அதிகமாக வந்து செல்லும் மிகப்பெரிய மால்களிலும் தானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுகிறது.
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி பாலியல் தொல்லை சம்பவம் நடந்து வருகிறது.
இது தொடர்பாக சட்டமன்றத்தில் இரண்டு மணி நேரம் குரல் எழுப்பியும் அதனை வெளியிடவில்லை.சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை வெளியிடப்பட்டது.நேரடி ஒளிபரப்பு செய்வதில் முதலமைச்சருக்கு பயம்.திமுக ஆட்சிக்கு வந்தபின் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஒரே திட்டமான மதுக்கடையை மட்டும் திறந்துள்ளனர். அதிலும் போலி சரக்குகள் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர்.இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. வேதனையும், துன்பமும் தான் மக்கள் சந்தித்து வருகின்றனர்” என்று கூறினார்.
செய்தியாளர்: திருமலை தமிழ்மணி (சேலம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: