இந்தச் சம்பவம் குறித்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் மங்களம் ரவி, “எனது தலைமையில் தாராபுரத்தில் பா.ஜ.க வளர்ச்சியடைந்து வருகிறது. இதைப் பொறுத்து பா.ஜ.க நிர்வாகி கொங்கு ரமேஷ், மாநில இளைஞரணிச் செயலாளர் யோகேஷ்வரன் ஆகியோர் என்னை நாள்தோறும் மிரட்டுகின்றனர். அவர்களின் ஆதரவாளராக இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் செயல்படுகிறார்.

மங்களம் ரவி

மங்களம் ரவி

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளத்தில் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தவறாகப் பதிவிட்டிருந்தார். அது குறித்து ஈஸ்வரனிடம் கேட்டபோது, ​​இந்து மக்கள் கட்சித் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் வேண்டுமென்றே என்னைத் தாக்கினர். அரசியல் காழ்ப்புணர்ச்சியில் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

பொதுவெளியில் இரு தரப்பினரும் ஆடையைக் கிழித்துக்கொண்டு சண்டை போட்டது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Source link