சுனிலுக்கு நேற்று பிறந்த நாளாகும். பிறந்த நாளில் அவருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, “நான் கட்டடத்தின் சுவருக்கும் இடிந்து விழுந்த ஸ்லாப் ஒன்றுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் சிக்கி இருந்தேன்” என்று தெரிவித்தார். இடிந்து விழுந்த கட்டடம் கடந்த 2014-ம் ஆண்டுதான் கட்டப்பட்டது. மிகவும் தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டியதால் கட்டடம் குறுகிய காலத்தில் இடிந்து விழுந்து விட்டது என்கிறார்கள்.

இடிந்து விழுந்த கட்டிடம்

இடிந்து விழுந்த கட்டிடம்

சுனில் மனைவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். சுனில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டது குறித்து அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்படவில்லை. இடிந்து விழுந்த கட்டட உரிமையாளர் இந்திரபால் பாட்டீல் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டட ஒப்பந்ததாரர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டடத்தின் கீழ்தளம் மற்றும் முதல் மாடியில் உணவுப்பொருள் நிறுவனம் ஒன்றின் குடோன் இருந்தது.

இரண்டாவது மாடி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மூன்றாவது மாடி கட்டி முடிக்கப்படாமல் இருந்தது. அதில் பிளாஸ்டிக் சீட் மூலம் தற்காலிக குடில் அமைத்து தொழிலாளர்கள் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Source link