சேலம் அருகே 14 வயது சிறுமிக்கு மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்த வினித் என்ற அசார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறுமியை ஆசை வார்த்தை கூறி வினித் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். வெளியே அழைத்துச் சென்ற வினித் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தந்தையிடம் கூறியதை அடுத்து, ஐந்து பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் வினித் என்கிற அசார், விக்னேஷ், சீனிவாசன், ஆகாஷ் மற்றும் அருண்குமார் ஆகிய ஐந்து பேரை சூரமங்கலம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)

விசாரணையில் வினித் என்கிற அசார் ஏற்கனவே திருமணம் ஆகி ஒன்றரை வயது குழந்தைக்கு தந்தையானதும், 14 வயது சிறுமியை நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதை அடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஐந்து பேரையும் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதை அடுத்து கைது செய்யப்பட்ட அனைவருக்கும் விந்தணு மற்றும் ஐந்து பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 14 வயது சிறுமியை ஐந்து பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: திருமலை, சேலம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link