சென்னை: ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லைகா நிறுவனம் ட்விட்டர் தளத்தில் ட்வீட் செய்துள்ளது.

கடந்த 28-ம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ உலகம் முழுவதும் வெள்ளித்திரையில் வெளியானது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார்.

முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து தயாரித்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் இந்தப் படம் ரூ.200 கோடி வசூல் கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Source link