திருநெல்வேலியில் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நெல்லை தூய யோவான் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் அதிமுகவின் முன்னாள் மாநிலங்களை உறுப்பினர் முத்துக்கருப்பன் கலந்து கொண்டார். கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள் ஜேக்கப், மறை குமார், முன்னாள் துணை முதல்வர் ஜான், நாசரேத் மர்கஸ் கல்லூரியின் முதல்வர் ஜவகர் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், கல்லூரியின் செயலாளர் ஜெயச்சந்திரன் கல்லூரியின் முதல்வர் சுதாகர் ஐசக் மற்றும் முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கேப்டன் ஆண்ட்ரூஸ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

இந்நிலையில், விழாவின்போது மேடையில் பேசிய அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் முத்து கருப்பன் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது திருநெல்வேலியில் பல்வேறு கல்லூரிகளை ஆரம்பித்துள்ளனர். இதனால், அவர்கள் ஆண்டதை தவறு என்று சொல்ல முடியாது என்று சிரித்த படியே கூறினார். தான் பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் பள்ளி கல்லூரிகளில் அதிகமாக படித்தேன். எனவே, சிறுபான்மையினர் மீது எனக்கு அளவுக்கதிகமான அன்பு உள்ளது. மாநிலங்களவையில் பல்வேறு தீர்மானங்களை தான் பதவியில் இருக்கும் போது பேசி அதை அமலுக்கு கொண்டு வந்தேன். இப்படி இந்த பதவி மற்றும் பெருமையெல்லாம் இந்த கல்லூரியில் படித்தது தான் காரணம் என பெருமையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க | மே தினம்.. தூய்மை பணியாளர்கள் விடுக்கும் கோரிக்கை இது தான்!

தொடர்ந்து பேசிய அவர், தான் படிக்கும் போது கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:Source link