“பா.ஜ.க வாங்கும் இடத்திலும் இல்லை, அ.தி.மு.க கொடுக்கும் இடத்திலும் இல்லை. ஆறாக உடைந்து கவர்ச்சிகரமான தலைமையே இல்லாத அ.தி.மு.க-வுடன் 25 சீட்டுகள் கொடுத்தால்தான் கூட்டணி… இல்லையேல் பா.ஜ.க தலைமையில் தனிக் கூட்டணி” என சமூக வலைதளத்தில் பதிவிட்ட பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். அமித் ஷா அறிவுறுத்தலுக்குப் பிறகும் பா.ஜ.க பிரமுகர்கள் இவ்வாறு பேசுவது அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது.
எச்சரிக்கும் ஜெயக்குமார்
இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், அண்ணாமலை சொல்லி இப்படியெல்லாம் சொல்லுகிறாரா… இல்லை அண்ணாமலை சொல்லாமல் சொல்கிறாரா… அதுதான் இப்போது கேள்வி. `பகிரங்கமாக எங்களின் பொருளாளர் எனக்குத் தெரியாமல் செய்தி போட்டிருக்கிறார். அது தவறு, அவரைக் கண்டிக்கிறேன்’ என்ற கருத்தை ஊடகங்களுக்கும் அண்ணாமலை தெரிவிக்க வேண்டும்.
அப்போதுதான் அண்ணாமலை மீது எங்களுக்குச் சந்தேகம் இருக்காது. அண்ணாமலை சொல்லித்தான் சொல்கிறார் என்று நாங்கள் நினைக்க வேண்டியிருக்கும்” எனக் கடிந்து கொண்டார்.எங்களுக்கு எதிர்வினையாற்றத் தெரியும்” என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.