மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் முதியவரும், அவரை காப்பாற்றச் சென்ற மனைவியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த கலகம் ஊராட்சி மிதியக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் உடையப்பன். இவருக்கு வயது 70. இவரின் மனைவி சம்பூரணம், வயது 62. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இவர்கள் இருவரும் தனித்தனியாகக் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். உடையப்பனும் சம்பூரணமும் கிடைக்கும் கூலி வேலைக்கும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் சென்று வந்துள்ளனர்.

பேராவூரணி பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் வீட்டு வாசலில் சென்ற மின்கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக உடையப்பன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருளில் அறுந்து கிடந்த மின் கம்பியைக் கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உடையப்பன் பரிதாபமாக உயிரிழந்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

உடையப்பனின் அலறல் சத்தம் கேட்டு அவரை தூக்குவதற்காக வந்த அவரது மனைவி சம்பூரணமும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார். இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையும் படியுங்கள்: மே தினம் : 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி அசத்திய தஞ்சை இளைஞர்..!

அதனைத்தொடர்ந்து, உடனடியாக மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் காலவடுதுறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த பேராவூரணி போலீசார், தம்பதிகளின் உடல்களை மீட்டு அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link