திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் விபூதி பிரசாத கவரில் அன்னை தெரசா புகைப்படம் இடம் பெற்ற விவகாரத்தில் இரு கோவில் சிவாச்சாரியார்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகின்றனர்.
இங்கு வரும் பக்தர்களுக்கு அண்ணாமலையார் சன்னதியில் விபூதி பிரசாதமும், அம்மன் சன்னதியில் குங்குமப் பிரசாதமும் வழங்கப்படுகிறது.
உங்கள் நகரத்திலிருந்து(திருவண்ணாமலை)
இந்த பிரசாதங்கள் வழங்க கூடிய கவரில் பல்வேறு நிறுவனங்கள் பெயரில் அச்சடிக்கப்பட்டு நன்கொடையாக வழங்கப்படும். கவரில் விபூதி, குங்குமங்கள் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது. இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலில் தற்போது வழங்கப்பட்டு வரும் விபூதி, குங்கும பிரசாத பாக்கெட்டில் தனியார் ஜவுளி கடையின் விளம்பரம் அச்சடிக்கப்பட்டு அதில் அன்னை தெரசா படம் அச்சிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கிறிஸ்தவ மத அடையாளம் இருப்பதாக கூறி மதம் மாற்றும் செயலுக்கு அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் உடந்தையாக இருப்பதாக இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் பிரச்னையை எழுப்பினர்.
இன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள இணையாலையர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இணை ஆணையர் உடனடியாக விபூதி பிரசாத குங்குமத்தில் அன்னை தெரசாவின் படம் அகற்றப்படும் என உறுதியளித்து சமாதானம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வராமல் மத அடையாளம் தொடர்பான புகைப்படத்தை அச்சிட்டு அதில் விபூதி பிரசாத குங்குமம் வழங்கியதால் சோமநாத குருக்கள் மற்றும் முத்துக்குமாரசாமி குழுக்கள் ஆகிய இருவரையும் 6 மாத காலத்திற்கு தற்காலிக பணி நீக்கம் செய்து கோவில் இணை ஆணையர் குமரேசன் உத்தரவிட்டார்.
விஏஓக்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஏஓ சங்கம் கடிதம்
இந்த இரு சிவாச்சாரியார்களும் ஆறு மாத காலத்திற்கு கோவிலுக்கு உள்ளே சென்று முறைதாரர் பூஜை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அன்னை தெரசாவின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததை மத ரீதியான பிரச்னையாக உருமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.